நீர்ச்சத்து, போஷாக்கின்மையால் நிகழ்ந்த மரணம்

57 0

நீர்ச்சத்துப் குறைபாடு மற்றும் போஷாக்கின்மை காரணமாக ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 75 வயதான கணவரின் சடலம் 11 நாட்களாகியும்  இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள அவரது மனைவியிடம்   பணம் இல்லாத நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில்  வைக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் திக்வெல்ல பதிகம, மஹகெதர தோட்டத்தில் வசித்து வந்த புஸ்ஸல ஹேவகே வீரசேன (75) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது திடீர் மரண விசாரணையின்போது, அவரது மனைவி  சோமாவதி (77) கூறுகையில்,

அயலவர்கள் தனக்கும் தனது கணவருக்கும் உணவு கொடுத்ததாகவும்  தனது கணவர் பத்கம அரசாங்க  வைத்தியசாலையிலிருந்து மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சுகவீனம் காரணமாக அவரை பார்க்க முடியவில்லை.  இதற்கு என்னிடம் பணம் இல்லாமையும் ஒரு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, கணவரின் இறுதிச் சடங்குகளைச் செய்ய தன்னிடம் பணம் இல்லாததால், அரசு செலவில் இறுதிச் சடங்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தனக்கு பிள்ளைகள் இல்லை எனவும் தென்னந்தோப்பு உரிமையாளர்  வழங்கிய சிறிய வீட்டில் கணவருடன் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட மாத்தறை பொது வைத்தியசாலையின்  சட்ட வைத்திய அதிகாரி, இடது நுரையீரலில் நிமோனியா நோயுடன் ஆஸ்துமா அதிகரித்ததன் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டதாக  தெரிவித்திருந்தார்.