பாரளுமன்றம் மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு

338 0

பாராளுமன்ற அமர்வு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவு வழங்கியும் தினேஷ் குணவர்தன வெளியேறாமல் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச உள்ளிட்ட தேசிய சுதந்திர முன்னணிக்கு பாராளுமன்றத்தில் தனித்து செயற்பட முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று அறிவித்தார்.

இதனை தொடர்ந்து குறித்த தீர்மானத்துக்கு கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்துவந்ததை அடுத்து பாராளுமன்றம் ஏற்கனவே 2 முறைகள் ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை சபையிலிருந்து வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.