விமலுக்கு சபாநாயகர் கொடுத்த பிறந்த நாள் பரிசு: அதிர்ச்சிக்குள்ளான விமல்

353 0

தேசிய விடுதலை முன்னணி தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சுயாதீன உறுப்பினர்களாக ஏற்க முடியாது என, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

ஏதேனும் கட்சியை அல்லது குழுவின் ஊடாக தேர்தலின் மூலம் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு வந்திருப்பின், குறித்த கட்சி அல்லது குழுவையே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என சபாநாயகர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகரின் கருத்தால் இரு தரப்பினர்களுக்கிடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு கூச்சல் குழப்பங்களால் சபை நடவடிக்கை பாதிப்புக்குள்ளானது.

இதன் காரணமாக சபை நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களையும் ஆராய்ந்து இன்று தமது தீர்மானத்தை அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியிருந்தார்