ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கண்டியில்

316 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டியில் மே தினக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

கண்டி கேடம்பேயிலிருந்து போகம்பரை மைதானம் வரையில் பேரணியாக சென்று கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர்களில் ஒருவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

பாரியளவு மக்களின் பங்களிப்புடன் பேரணியும் கூட்டமும் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கட்சியின் கிளைக் காரியாலயங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சியுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட உள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் ஏனைய அதிகாரிகளின் பங்களிப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்