சம்பள முரண்பாடு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றும் (08), நாளையும் (09) அரச பல்கலைக்கழங்களின் விரிவுரையாளர்கள் சம்மேளனம் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தமொன்றை முன்னெடுத்துள்ளது.
களனி பல்கலைக்கழகம் உட்பட சலக பல்கலைக்கழக பேராசிரியர்களும் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் இணைந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையிலும் தீர்வு கிடைக்காவிடின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் சம்மேளனம் கூடி ஆராயவுள்ளதாகவும் அச்சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது

