நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் நியாய பூர்வமாக நடைபெறுவதில்லை- விமலவீர திஸாநாயக்க(காணொளி)

273 0

நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் நியாய பூர்வமாக நடைபெறுவதில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வழக்கு விசாரணைகளை பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

—சமல் ராஜபக்ச அரசாங்கத்துடன் இணைந்துகொண்டுள்ளதாக நினைக்கவில்லை. மஹிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரர் என்ற வகையில் அவரை மதிக்கின்றோம். அவரின் விருப்பத்திறகு இணங்க கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவினை பெற்று அரசாங்கத்தை அமைக்க முடியாது. தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மஹிந்த ராஜபக்சவிற்கே உண்டு. கூட்டு எதிர்க்கட்சி என்ற சீட்டுக்கட்டின் துருப்புச் சீட்டு மஹிந்த மாத்திரமே. ஒரு கட்டில் ஒரு துருப்புச் சீட்டு மாத்திரமே இருக்க முடியும். விமல் வீரவன்சவை சிறையில் அடைத்திருக்கும் செயற்பாடானது தவறிழைக்காதவர்களை தண்டிப்பதற்கான உபாயமெனவே நான் கருதுகின்றேன். அவரது அடிப்படைகளை மீறி செயற்படுகின்றார்கள். பொது சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பிலான சட்டத்தை மீறி நிதி மோசடி விசாரணைப் பிரிவு இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டிய பலர் இன்று வெளியில் இருக்கின்றனர். இது தொடர்பில் விசாரிப்பதில்லை. வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படுவதில்லை– என்று குறிப்பிட்டார்.