கோப் குழுவின் அறிக்கை குறித்து சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட கடிதத்தை, சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட கோப் குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு கடந்த 25ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டது.

