போதைப் பொருள் வர்த்தகத்தை தடுக்க பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்

372 0

சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்தை தடுப்பது தொடர்பில் இந்துசமுத்திர வலயத்திலுள்ள அனைத்து நாடுகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பலர் கடல் வழி பாதையையே பயன்படுத்துவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, ஒவ்வொரு நாட்டின் அதிகாரத்திற்கு வௌியேயும் சர்வதேச கடல் பரப்பில் அவர்களுக்கு (போதைப் பொருள் வர்த்தகர்கள்) எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்த உரிய முறையொன்று இல்லாமல் போனது பாரிய பிரச்சினை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இது தொடர்பில் இந்து சமுத்திரத்திலுள்ள நாடுகள் விரைவில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய வேளையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.