தொற்று நோய்களுக்கு ஆளாகி தனியார் மருத்துவமனைகளில் மரணிக்கும் நோயாளர்கள் தொடர்பான தகவல்களை சுகாதார அமைச்சிற்கு கையளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலை சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன விடுத்துள்ளார்.
தனியார் மருத்துவமனை ஒழுங்கமைப்பு சபை ஊடாக இது தொடர்பில் சகல தனியார் மருத்துவமனைகளையும் தெளிவுப்படுத்துமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவ்வாறான தகவல்களை வழங்குவதன் மூலம் புதிய தொற்று நோய் பரவலை தடுக்க முடியும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

