தம்புள்ளை மருத்துவமனையின் பிறப்பு கட்டுப்பாட்டு கருவி தொடர்பில் சிறப்பு விசாரணை

347 0

தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் தாய்மார்களுக்கு பலவந்தமாக பிறப்பு கட்டுப்பாட்டு கருவி உடலில் பொருத்த மருத்துவமனை அதிகாரிகள் முயற்சிப்பது தொடர்பில் சிறப்பு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் அது தொடர்பில் உடனடியாக தனக்கு அறிவிக்கமாறு தம்புள்ளை மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளருக்கு அவர் அறிவித்துள்ளார்.

தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை அறையில் குழந்தை பிரசவித்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் தாய்மார்களுக்கு பலவந்தமாக பிறப்பு கட்டுப்பாட்டு கருவி உடலில் பொருத்தப்படுவதாக செய்தி வெளியாகியிருந்தது.

அதனை தொடர்ந்தே மத்திய மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.