உலகின் இரண்டாவது பாரிய வாநூர்தி தளத்தின் செயற்பாடுகள் இன்று முதல்

258 0
சீனாவினால் திபேத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது பாரிய வாநூர்தி தளம் இன்று முதல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபேத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த வாநூர்தி தளத்தின் ஊடாக, எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் வருடாந்தரம் 7 லட்சத்து 50 ஆயிரம் பயணிகளையும் 3 ஆயிரம் தொன் சரக்குகளையும் கையாளகூடியதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய திபேத்தில், சீனா பாரிய அளவில் வீதி, தொடரூந்து மற்றும் வான் பயண நடவடிக்கைகளை அதிகரித்து வருவதற்கு இந்தியா தமது அதிர்ப்தியை வெளியிட்டுள்ளது.

இன்று தமது செயல்பாடுகளை ஆரம்பிக்கும் வாநூர்தி தளம் இந்திய எல்லையை ஒட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.