இலங்கை வருகிறார் மோடி?

360 0
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையை, இந்திய பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைப்பார் என்று, இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் பார்வையிட்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
அதேநேரம் இந்த வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை தீர்ப்பது தொடர்பில் இலங்கையின் சுகாதார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மலையகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 4000 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் பணிகளையும் இந்திய உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார்.
இதன்படி அவர் பூண்டுலோயா – டன்சின் தோட்டத்தில் முன்னெடுக்கப்படும் இந்த வீட்டுத் திட்ட நிர்மாணப் பணிகளை நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.