தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.வடக்கில் இடம்பெற்று வருகின்ற நிலமீட்பு போராட்டங்கள் தொடர்பில் இந்த கடிதம் அமைந்துள்ளது.
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கிலும், முல்லைத்தீவு – கேப்பாபுலவிலும் பொதுமக்கள் தங்களுக்குரிய காணிகளை விடுவிக்க கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த காணிகளை விடுவிக்க ஆவணம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் சம்பந்தன் கோரியுள்ளார்.

