செயற்திறன் மிக்கதும் சுயாதீனமானதுமான ஒரு சேவை எதிர்பார்க்கப்பட்டாலும் நீதித்துறை சேவையில் தாமதம் இருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொட்டாவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இலங்கையில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
இதனால் கொழும்பில் அன்றாட நடவடிக்கைக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டதுடன், பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இவ்வாறான சூழலில் இலங்கையில் முதலீட்டாளர்கள் வருகை தருவதற்கு தயங்குகின்றனர்.
கல், மணல், மண் கொள்ளை மற்றும் பாதாள உலக்தினர் செயற்பாடு நாட்டில் அதிகரித்துள்ளன.
இது, நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் சமாதானத்திற்கும் சவாலாக அமைந்துள்ளது.
இவ்வாறான விடயங்களில் நாட்டின் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகள் பெரும் பாதிப்புக்கு உட்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

