ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் இலங்கை இராணுவத்தினரை காட்டிக் கொடுத்துவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய சுதந்திர முன்னணியில் ஊடக பேச்சாள் முஸமில் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்படமாட்டாதென ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றனர்.
எனினும் வெளிவிவகார அமைச்சர் கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதற்கு கால அவகாசம் கோறுகிறார்.
இது முன்பின் முரணான விடயமாகும்.
இலங்கையினதும், இலங்கை இராணுவத்தினதும் கௌரவத்தை பாதுகாப்பது வெளிவிவகார அமைச்சரின் கடமையாகும்.
எனினும் வெளிவிவகார அமைச்சர் இலங்கை அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் முஸமில் குற்றம் சுமத்தியுள்ளார்.

