பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள, சிறைச்சாலைக்குள்ளேயே பாதாள வழக்கு விசாரணை மேற்கொள்ள நீதிமன்ற பிரிவு அமைக்க யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் களுத்துறை சிறைச்சாலையில் இருந்து பாதாள உலக குழு தலைவரான சமயங் உள்ளிட்டவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லும் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் மற்றும் கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பம் என்பவற்றை கருத்தில் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்;டுள்ளது.
சிறைச்சாலை மற்றும் நீதிதுறையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன் போது, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு காவல்துறை விசேட படையணி பயிற்சிகள் வழங்குவது உள்ளிட்ட பல யோசனைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.
இந்த கலந்துரையாடலின் போது, பாரிய குற்ற செயல்களுடன் தொடர்பு கொண்டு சிறையில் உள்ளவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வெளியே அழைத்து செல்லும் போது, மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
அதன்போதே, பாரிய குற்றவாளிகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை சிறைச்சாலைக்கு உள்ளேயே விசாரணை செய்வதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது.

