ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றிற்கு வாய்பளிக்குமாறு கோரி அகில இலங்கை உந்துருளியாளர்களின் சங்;கம், கொழும்பு காலி முகத்திடல் சுற்றுவட்டத்திற்கு முன்னால் உள்ள வீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
முழுமையாக முகத்தை மறைக்கும் தலை கவசத்தை நீக்குவது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் மேற்கொள
குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தலைக்கவசம் தொடர்பிலான ஆறாவது சரத்தின் கீழ் நீதிமன்ற உத்தரவின் பேரில் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்திற்கு தடை விதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதியுடன் தாம் கலந்துரையாட வேண்டும் என அகில இலங்கை உந்துருளியாளர் சங்கத்தின் செயலாளர் ச்சிரந்த அமரசிங்க தெரிவித்தார்.

