குவைட்டில், குவைட் சிட்டி நகரத்தில் இலங்கையர் ஒருவரினால் இலங்கை பெண் தீயிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
நகரின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த வாரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட இந்த நாட்டு காவல்துறையினர், குறித்த இலங்கையரை கைது செய்தனர்.
தீயினை கட்டுப்படுத்த குவைட் தீயணைப்பு படையினர் கடும் முயற்சி மேற்கொண்டதுடன், அந்த இடத்திற்கு பாதுகாப்பு படைபிரிவும் மருத்துவ குழுவும் பிரசன்னமாகியிருந்தன.
சம்பவத்தின் போது கடும் தீக்காயத்திற்கு உள்ளான இலங்கை பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
இதுதொடர்பில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குறித்த குடியிருப்பு பகுதியில் பணிப்புரிந்த இலங்கை இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.
எனினும், குறித்த பெண் தீ மூட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாகவும் அவரை காப்பற்றச் சென்ற தமக்கும் தீக்காயம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், பின்னர் தானே குறித்த பெண் மீது எரிதிரவம் ஊற்றி தீ மூட்டியதாக குறித்த இளைஞன் காவல்துறையினருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளதாக, த அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர் அந்த நாட்டு நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

