கல்கமுவ, மஹகல்கடவல நகரில் புடவைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கான சேவையில் உள்ள பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அரச பஸ் ஒன்றும் இன்று (12) நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் குருணாகலை மற்றும் கல்கமுவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவரின் நிலைமை கவலைக்கிடமானதாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விபத்துக்குள்ளான அரச பஸ் வண்டி விபத்துக்குள்ளான பொது அருகிலுள்ள முச்சக்கர வண்டியொன்றுடனும் மோதியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

