3ஆவது நாளாகவும்…

294 0

திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரி சங்கத்தின் ஏற்பாட்டில், 3ஆவது நாளாகவும் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

இதில் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் கலந்துகொண்டனர். 2012ஆம் ஆண்டு தொடக்கம் பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதோடு, தமக்கான பட்டதாரி நியமனங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி    சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.