பிரிந்து போகாமல் கைகோர்த்து ஒன்றுசேர்ந்து இருப்பதன் மூலமே பிரச்சனைக்கு தீர்வைக்காண முடியும்- மைத்திரிபால சிறிசேன(காணொளி)

350 0

பிரிந்து போகாமல் கைகோர்த்து ஒன்றுசேர்ந்து இருப்பதன் மூலமே பிரச்சனைக்கு தீர்வைக்காண முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் ஜனாதிபதியிடம் தெரிவிக்க செயற்றிடத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பிராந்திய அலுவலகத்தை திறந்த வைத்த பின் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் மக்களின் பிரச்சனை தீரவில்லை என்றும், பாராளுமன்றம், மாகாணசபைகள், பிரதேச சபைகள் ஆகியன ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் இதன் போது குறிப்பிட்டார்.

மக்களின் பிரச்சனைகளை நேர்மையாக சிந்திக்க வேண்டும் என்றும், நாட்டில் பல பிரச்சனைகள் உள்ளதாகவும், எல்லாவற்றிற்கும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தினால் போராட்டங்கள் அர்த்தமற்றது என்றும் குறிப்பிட்டார்.

மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மாதம் ஒரு முறை யாழ்ப்பாணத்திற்கு வருகைதர இருப்பதாகவும், அதே போன்று அமைச்சர்களையும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டில் மீண்டும் ஓர் யுத்தம் ஏற்பட இடமளிக்ககூடாது என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நல்லிணக்கபுரம் மற்றும் வலிகாமம் வடக்கு ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்ட வீடுகளின் திறப்புகனை மக்களிடம் கையளித்தார்.

இன்றைய நிகழ்விற்கு அமைச்சர்களான மகிந்த சமரசிங்க, துமிந்த திசநாயக்க, பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், அங்கஜன் இராமநாதன், மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.