பேராதனை, கங்கொடவத்தை, மெகாடகளுகமுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குள்ளான இளைஞர் படுகாயமடைந்து பிரதேசவாசிகளால் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கங்கொடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலைச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

