சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருக்கும் நபர்கள் தொடர்பில் அறிவிக்க காவற்துறை விசேட தொலைப்பேசி இலக்கங்கள் இரண்டினை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் , 011 2326229 அல்லது 011 2854880 என்ற இலக்கங்களுக்கு அழைத்து தகவல் தெரிவிக்க முடியும் என காவற்துறை குறிப்பிட்டுள்ளது.
குறித்த தகவல்களின் முழு இரகசியதன்மையும் பாதுகாக்கப்படும் என காவற்துறை தெரிவித்துள்ளது.
24 மணித்தியாலங்களும் சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பில் குறித்த இலக்கத்துக்கு அழைத்து தெரிவிக்க முடியும்.
மேலும் , சரியான தகவலை வழங்கும் நபருக்கு பரிசுப்பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

