உலகத்தின் யன்னலை வன்னியில் திறந்து வைத்த பேராசிரியர் அருட்தந்தை எட்வின் சவுந்தரா காலமானார்!

209 0

உலகத்தின் யன்னலை வன்னியில் திறந்து வைத்த பேராசிரியர் அருட்தந்தை எட்வின் சவுந்தரா ,இம் மாதம்  13 ஆம் நாள் (13-01-2023) அமெரிக்காவில் காலமானார்.

ஆங்கிலம் என்ற யன்னல் ஊடகவே உலகத்தை முழுமையாக பார்க்க முடியும் என உணர்ந்த பேராசிரியர் அருட்தந்தை எட்வின் சவுந்தரா யுத்ததின் வடுகளை தாங்கிய வன்னி மாணவர்களை நிமிரச் செய்யும் நோக்குடன் விசுவமடுவில் ஆங்கில மொழி வளாகத்தை உருவாக்கினார்.

 ‘THE VANNI FEET’ என்னும் ஆங்கிலக் கல்வி ஊடாக வன்னியை வலுப்படுத்தும் ஆங்கிலக்கல்வியை வன்னியில் முன்னெடுக்கும் தொண்டு நிறுவனங்களின் சம்மேளனத்தை உருவாக்கினார்.

ஈழத்தமிழர்களின் வரலாற்றை பாதுகாக்கவும் சர்வதேசத்திற்கு தெரிவிக்கவும் நூலகத்தை உருவாக்கினார்.

உரோமில் உள்ள பல்கலைக்கழதக்தில் கலாநிதிப்பட்டம் பெற்றவர்.

யாழ். குருமடத்தில் தத்துவவியல் பிரிவு தலைவராக பணியாற்றினார்.

இலங்கை,அமெரிக்கா,  பப்புவாநியுகினியா ஆகிய நாடுகளில் தத்துவவியல் கற்பித்தார்.

மனித கண்ணியத்தை நோக்கியதாக இவரது கற்பித்தல் இருந்தது.

தெளிவு , துணிவு , நம்பிக்கை நிறைந்தவராக விளங்கினார்.

இவரது இறுதி நிகழ்வு இன்று{26} அமெரிக்காவில் நடை பெறுகின்றது. நேரடி ஒளிபரப்பினை இவ் இணைப்பின் ஊடாக பார்க்க முடியும்.

இன்று(26)  விசுவமடுவில் ஆங்கில மொழி வளகத்தின் அருட்தந்தையின் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.