மத்திய வங்கியின் ஆளுநரிடன் இரண்டாவது நாளாகவும் விசாரணை

334 0

மத்திய வங்கியின் பிணை முனை தொடர்பான விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று இரண்டாவது நாளாகவும் சாட்சி விசாரணை மேற்கொண்டது.

இதன்படி, மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் இந்ரஜித் குமாரசுவாமி இன்று இரண்டாவது நாளாகவும் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

இதன்போது மத்திய வங்கியின் ஆளுநர் பிணை முறி விநியோகம் இடம்பெறும் முறைமை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு தெளிவுப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாம் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படும் போது, மத்திய வங்கிக்குள் தவறிழைப்பவர்கள் சிலர் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஏல முறையில் மேற்கொள்ளப்படும் பிணை முறி விநியோக முறைமைக்கு மாற்றிடாக எதிர்காலத்தில் மாற்று முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.