கர்பிணி கொலை – சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டனர்.

324 0

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் நிறை கர்ப்பிணி கொலை வழக்கில் சந்தேகநபர்கள் இருவரையும் சாட்சி அடையாளம் காட்டியுள்ளார்.

கடந்த மாதம் ஊர்காவற்றுறை கரம்பொன் எனும் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவர் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை ஊர்காவற்றுறை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

இந்தநிலையில் இவர்கள் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் கண்கண்ட சாட்சியமான சிறுவன் இவர்கள் இருவரையும் அடையாளம் காட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த சந்தேகநபர்களில் முதலாமனவரது இரத்த மாதிரியை பெற்றுக்கொள்வதற்காக அவரை நாளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுமதிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன் இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் அதுவரை குறித்த சந்தேகநகர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.