வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் வாழ்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் 6 வருடங்களாக வசிக்கும் சுமார் 40 குடும்பங்கள், கடந்த 5ஆம் திகதி தொடக்கம் வன இலாகாவினரால் தொந்தரவுக்குள்ளாகுவதாகவும், தாம் வாழும் காணியை தமக்கு வழங்குவதற்கான வாக்குறுதி வழங்கியபோதிலும், இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தாம் மின்சார வசதியோ, வீதி வசதியோ, வீட்டுவசதியோ இன்றி வாழ்வதனால், தமது பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகி வருவதாக தெரிவத்திருந்தனர்.
அத்துடன் தாம் வாழும் காணிளை தமக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையேல் தொடர்ந்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வடக்கு மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் கலந்துரையாடியிருந்தார்.

