ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

