யானைத் தாக்குதல் – நட்டஈட்டை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

246 0

காட்டு யானை தாக்குதலால் ஏற்படும் மரணம் மற்றும் அங்கவீனம் என்பவற்றுக்காக வழங்கப்படும் நட்டஈடு தொகையை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.

இந்தநிலையில் குறித்த நட்டஈட்டு தொகை இரண்டு லட்சத்திலிருந்து ஐந்து லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா சமர்பித்திருந்தார்.

காட்டு யானை தாக்குதலால் வீடு மற்றும் உடமைகளுக்கு ஏற்படும் சேதங்களுக்காக செலுத்தப்படும் நட்டஈட்டு தொகை அண்மையில் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.