யட்டியாந்தோட்டை காவல்நிலைய பொறுப்பதிகாரியால், அந்த காவல் நிலையத்தைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த காவல்துறை அலுவலர், அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சீத்தாவாக்கபுர உதவி காவல்துறை அதிகாரியால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

