இலங்கை உட்பட்ட ஐந்து நாடுகளின் மாணவர்கள் தொடர்பான நுழைவுதேவைகளை இறுக்கமாக்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது.
சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் முகமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய நடைமுறைப்படி ஜப்பானில் கல்விகற்க விரும்பும் மாணவர்கள், தமது விண்ணங்களுடன் சொத்துக்களின் விபரம், வங்கி அட்டை, வைப்புக்களின் சான்றுகள் என்பவற்றை சமர்ப்பிக்கவேண்டும்.
இல்லையேல் அவர்கள் ஜப்பானுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத குடியேறிகளை தண்டிப்பதைவிட, கொள்கையில் மாற்றங்களை கொண்டு வருவது சிறப்பானது என்று ஜப்பான் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

