வல்லாப்பட்டையுடன் ஒருவர் கைது

312 0

சுமார் 12 லட்சம் ரூபா பெறுமதியான 26 கிலோ கிராம் வல்லாப்பட்டையுடன் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறி;த்த வல்லாப்பட்டயை சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோதே அவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர், குளியாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.