கருணாவுக்கு சிக்கல்!

349 0

புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பித்துள்ள நிலையில், முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சிக்கல்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை கருணா ஆரம்பித்திருந்தார்.

புதிய கட்சி தொடர்பில் கருணா வெளியிட்ட கருத்தினால், சிக்கல் நிலைக்கு முகங்கொடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவராக சில காலம் செயற்பட்ட கருணா, தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்த கருணா, “தனது தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எனவும், தனது கட்சி மஹிந்தவுக்கு அரசியல் ரீதியில் உதவி செய்யும்” என குறிப்பிட்டார்.

இவ்வாறு கருணா கூறியமையினால் புதிய கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னாள் போராளிகள் சிலர், கருணாவின் அரசியல் கட்சியில் இணைந்திருந்தனர். எனினும் மஹிந்த மீதான கருணாவின் விசுவாசத்திற்கு அவர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக கருணா கடும் சிக்கல் நிலைக்கு முகங்கொடுத்துள்ளார் என அந்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாகவே, கருணா புதிய கட்சி ஆரம்பித்ததாக கொழும்பு ஊடகங்கள் சில தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.