தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் பெறமுடியாத தமிழ் ஈழத்தை, யாராலும் பெற்றுத்தர முடியாது-ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை

359 0

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் பெறமுடியாத  தமிழ் ஈழத்தை,  யாராலும் பெற்றுத்தர முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரினாலும் தமிழ் ஈழத்தை பெற்றுத்தர முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஈழம், ஈழம், என்று இருக்கின்ற அனைத்தையும் இழந்ததுவிட்ட இந்நிலையில் இருக்கின்ற மக்களையும் இழக்கின்ற சூழலை உருவாக்கக்கூடாது. மாற்றினைத்தை வாழ வைத்து மாற்றினமே வாழ், தமிழினமே தாழ், என்று இனிமேலும் செயற்படாமல் தமிழினத்தையும் வாழ வளம்பெற, வளர்ச்சிபெற செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தற்கால சூழலுக்கு ஏற்றவகையில், செயற்பட வேண்டியுள்ளது.

கடந்த காலத்தில் ஈழம் என்ற நோக்கத்தோடு செயற்பட்டதனால் தான் புல்லுமலை, தாந்தாமலை, குடும்பிமலை போன்ற பகுதிகளில் சிற்றூளியர்களைக்கூட பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே இவ்வாறான நிலமைகளை நன்கு அறிந்த  தலைவர் சம்மந்தன் ஒற்கையாட்சியின் கீழ் தீர்வுக்காக முயற்சிக்கின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள ஏனைய மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அன்றிலிருந்து செயற்பட்டு வருகின்றோம். நாங்கள் பிரிவினவாதத்தைக் விரும்பவில்லை, அவ்வாறு நினைத்திருந்தால் அன்றிலிருந்து சேர்பொன் இராமநாதன், சேர்பொன். அருணாச்சலம், போன்றோர் நாட்டைக் கூறுபோட்டிருப்பார்கள்.

1947 ஆம் ஆண்டுக்குப்பின் இலங்கைளில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களை கல்வி, கலை கலாசாரங்கள் போன்ற அனைத்து விடையங்களிலும் புறக்கணிந்து வந்தது.

இதன்காரணமாகத் தான் காலிமுகத் திடல் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரைக்கும் எமது தலைவர்கள் போராடினார்கள்.