தூக்கில் தொங்கிய நிலையில் முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்பு

90 0

முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் குறித்த போராளி நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த பகுதியை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் போராளியான கோபு என அழைக்கப்படும் இலங்கராசா இளங்கோவன் என்ற 28 வயதுடையவர் என அடையாளங்காணப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.