கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேசிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
MH 179 என்ற மலேசிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நேற்று இரவு கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று அதிகாலை 1.50 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
பின்னர் சரி செய்யப்பட்டு இன்று பிற்பகல் மீண்டும் அந்த விமானம் கொழும்பு நோக்கி புறப்பட உள்ளதாக மலேசிய விமான நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

