இந்து சமுத்திரத்தில் அமைதியான கடற்போக்குவரத்தை உறுதி செய்யும் மாநாடு

254 0

இந்து சமுத்திரத்தில் அமைதியான மற்றும் சுதந்திர கடற்போக்குவரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை திட்டமிடும் நோக்கில் அனைத்து தரப்பினரதும் பங்களிப்புடனான மாநாடொன்றை ஏற்பாடு செய்வதற்கு இலங்கை தயார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இந்து சமுத்திரத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுவதற்கான சிறந்த வழி இதில் பயணிக்கும் இராணுவக் கப்பல்களுக்காக ஒழுக்கக் கோவை ஒன்றை தயாரிப்பது என்று பிரதமர் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிாயா, டீகின் பல்கலைக்கழகத்தின் சட்ட பீட விஷேட அழைப்பினர்களுக்கான இராப் போசனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள கடல்சார் பயங்கரவாதம் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ள பிரதமர், விடுதலைப் புலிகளின் கடல்சார் பயங்கரவாதம் முடிவுற்று வர்த்தக கப்பல்கலை கடத்தும் கடல்சார் பயங்கரவாதம் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற் கொண்டு இந்து சமுத்திரத்தை அமைதியான வலயமாக உருவாக்குவதற்கு சிறந்த பொறிமுறை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

அதற்காக இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகள் மற்றும் பிரதான கடல்சார் நிறுவனங்கள் ஒன்றிணைந்த கூட்டமைப்பை உருவாக்குவதற்கு தான் யோசனை முன் வைப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.