எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக கிடைக்கப் பெற்றுள்ளது என்று அரசாங்க அச்சகர் கூறியுள்ளார்.
எல்லை நிர்ணய மேன்முறையீட்டு அறிக்கை வர்த்தமானியில் இன்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என்று அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று தெரிவித்திருந்தார்.
எல்லை நிர்ணய குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கடந்த ஜனவரி 17ம் திகதி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கைளிக்கப்பட்டது.
எனினும் சில குறைபாடுகள் காரணமாக அந்த அறிக்கை வர்த்தமானியில் வௌியிடுவதற்கு தாமதம் ஏற்பட்டிருந்தமை கூறத்தக்கது.

