லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன்

409 0

201607170416393708_Indian-origin-minister-in-UK-vows-to-create-millions-of-jobs_SECVPFஇங்கிலாந்து நாட்டில் புதிய பிரதமர் தெரசா மே மந்திரிசபையில், இந்திய வம்சாவளி பெண் பிரித்தி பட்டேல் (வயது 44), சர்வதேச வளர்ச்சித்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவரது பூர்வீகம், குஜராத் மாநிலம் ஆகும். முந்தைய டேவிட் கேமரூன் மந்திரிசபையில் ராஜாங்க மந்திரி பதவி வகித்தார். இவர், ஐரோப்பிய யூனியனில்  இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேபினட் மந்திரி பதவி ஏற்ற நிலையில் பிரித்தி பட்டேல் கூறியதாவது:-வறுமை, நோய், பெருந்திரளான மக்கள் இடம் பெயர்வு உள்ளிட்ட நமது கால சவால்களை தொடர்ந்து சந்திப்போம். வளர்ந்து வரும் உலகில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெற்றிகரமாக வெளியேறுகிற சூழலில், இதுவரையில்லாத அளவுக்கு இங்கிலாந்து புறஉலகில் பார்க்கப்பட வேண்டும். உலக அளவில் நமது இடத்தை பாதுகாப்பதற்கு சர்வதேச கூட்டாளித்துவத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.