அத்துரலிய ரத்தன தேரருக்கு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது- சம்பிக்க ரணவக்க

220 0
அத்துரலிய ரத்தன தேரர் அரசியல் கட்சி ஒன்றில் அங்கம் வகிக்காது சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.
அவர் சுயாதீனமாக செயற்படுவாராயின் தாம் வகிக்கும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பொது தேர்தலின் போது ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டதன் மூலம் அந்த முன்னணிக்கு 13 தேசிய பட்டியல் உறுப்புரிமைகள் கிடைக்க பெற்றன.
அவற்றில் ஒரு உறுப்புரிமை ஜாதிக ஹெல உறுமயவிற்கு கிடைக்க பெற்றது.
அந்த உறுப்புரிமை அத்துரலிய ரத்தன தேரருக்கு வழங்கப்பட்டதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் எடுக்கவுள்ள எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நாளை மத்திய குழுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.