மின்சார பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி பொறியியலாளர் சங்கத்துடன் கலந்துரையாடல்

277 0
தற்போது நிலவும் மின்சார பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மின்சார பொறியியலாளர் சங்கத்துடன் கலந்துரையாடவுள்ளார்.
இந்த கலந்துரையாடல் எதிர்வரும்  வெள்ளிக்கிழமை, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக, மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அதுல வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
வரட்சியான காலநிலையுடன் தற்போது மின்னுற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 10 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக மின்னுற்பத்திகளும் குறைவடைந்துள்ளதாக மின்சார பெறியியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையிலேயே ஜனாதிபதியுடனான சந்திப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.