அதிகரித்துள்ள தேங்காய் விலையை கட்டுப்படுத்துவதற்காக 40 ஆயிரம் மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.
அமைச்சரவை இணை பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.
குறுகிய தீர்வாக இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ஏற்ற வகையில் சிறப்பு பொருள் வரியை சீர்த்திருத்த அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

