கலாசார அதிகார சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான ஆரம்பக் கூட்டம்(காணொளி)

411 0

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக, கலாசார அதிகார சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான ஆரம்பக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக, கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில், மண்முனை வடக்கு பிரதேச கலாசார அதிகார சபையும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இன்றைய கூட்டத்தை நடத்தியது.
2017 ஆம் ஆண்டுக்கான ஆரம்ப கூட்டம், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் தலைமையில், பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

2016 ஆம் ஆண்டில் நடைமுறைபடுத்தப்பட்ட செயல்திட்டங்கள் தொடர்பாகவும், 2017 ஆம் ஆண்டில் நடைமுறைபடுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாப்பட்டது.