அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வி.கே சசிகலா, பெங்களுர் – அக்ரகார நீதிமன்றில் சரணடைந்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேருக்கு நேற்று உச்ச நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்து சிறைத்தண்டனை விதித்தது.
அத்துடன், நீதிமன்றில் சரணடைய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தவிட்டது.
எனினும் தமது இரண்டு வாரகால அவகாசம் வேண்டும் என கோரி சசிகலா சார்பில் இன்றைய தினம் மனுதாக்கல் செய்யப்பட்ட போதிலும், அதனை நீதிமன்றம் நிராகரித்தது.
இதனையடுத்து, சென்னையில் இருந்து பெங்களுருக்கு சிற்றூர்தி மூலம் வந்த சசிகலாவும் இளவரசியும் மாலை 5.15 அளவில் நீதிபதி முன்னிலையில் சரணடைந்தனர்.
இதனிடையே, இந்த வழக்கின் மற்றுமொரு குற்றவாளியான சுதாகர் நாளைய தினம் நீதிமன்றில் சரணடைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

