காதலர் தினத்தை முன்னிட்டு இறக்குமதி செய்த 53 கிலோ ரோஜா மலர்கள் அழிப்பு

352 0

காதலர் தினத்தை முன்னிட்டு அரசியல் வாதி ஒருவரினால் இறக்குமதி செய்யப்பட்ட 53 கிலோ ரோஜா மலர்கள் மற்றும் 2 ஆயிரம் ஏனைய மலர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

தாய்லாந்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் இரண்டு பொதிகளில் கடந்த சனிக்கிழமை இந்த மலர்கள் விமானம் மூலம் எடுத்து வரப்பட்டிருந்தன.

இந்தப் பொதிகளை பொறுப்பேற்க வந்திருந்தவரிடம் விசாரணை நடத்திய போது, அரசியல்வாதி ஒருவரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் அரசியல்வாதி ஒருவரே இவற்றை இறக்குமதி செய்திருந்தார் என்று விமான நிலைய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த இரண்டு பொதிகளிலும் எடுத்து வரப்பட்ட மலர்களில் பூச்சிகள் மற்றும் ஏனைய உயிரினங்கள் இருக்கலாம் என்று கருதி தேசிய தாவரவியல் தொற்று சேவை அதிகாரிகள் இவற்றைக் கைப்பற்றினர். இதனையடுத்து இந்த ரோஜா மலர்களை எரித்து அழிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.