ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டம்

250 0
ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் இன்று கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கவுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் நேற்றிரவு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரை சென்றடைந்தார்.
இந்த நிலையில், இன்று கீலோங்கில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கௌரவ சட்ட கலாநிதி பட்டத்தை வழங்கி கௌரவிக்கவுள்ளது.
வன்முறை, முரண்பாடுகளில் இருந்து நிலையான ஜனநாயகத்தை நோக்கி இலங்கையை கொண்டு செல்லும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை கௌரவிக்கும் வகையிலேயே கௌரவ கலாநிதி பட்டம் அளிக்கப்படவுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்த முதல் இலங்கை பிரதமர், ரணில் விக்கிரமசிங்கவே என்பது குறிப்பிடத்தக்கது.