கிளிநொச்சி பரவிபாஞ்சான் மீண்டும் தமக்கு – இராணுவத்தினர்

461 0
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளான மொத்தம் 9 ஏக்கரையும் படையினரின் பயன்பாட்டிற்கே வழங்குமாறு இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் மீன்டும் கோரப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பரவிப்பாஞ்சான் கிராமத்தின் பெரும் பகுதியை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்தனர்.்இதில் மக்களுன் நிரந்தர உறுதிக்காணிகள் பலவும் அடங்கியிருந்தன. இவற்றினை விடுவிக்குமாறு கோருக்கை விடுத்து குறித்த பிரதேச மக்கள் நீண்டகாலமாக பல போராட்டாங்களை நடாத்தி வந்தனர்.
இதன் பயனாக அப்பிரதேசத்தின் சில பிரதேசங்கள் கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டபோதிலும் இன்னமும் 27 குடும்பங்களின் நிலங்களும் பொது கட்டிடங்களும் உள்ளடங்களாக படையினர் வசம் 9 ஏக்கர் நிலம் உள்ளது.
இவ்வாறு படையினர் வசம் உள்ள 9 ஏக்கர் நிலத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் , வங்கி கட்டிடம் , புலிகள் சமாதானச் செயலகம் அமைத்திருந்த காணி உள்ளடங்களாகவே மேற்படி 9 ஏக்கர் நிலம் இன்னமும் படையினரின் பிடியில. உள்ளது. இவற்றிலும் புலிகள் அமைத்த செயலகங்களும் மக்களின் நூலமாக காணப்பட்டபோதிலும் மக்களின் குடியிருப்பாக கானப்பட்ட 27 குடும்பங்களிற்குச் சொந்தமான சுமார் 4.5 ஏக்கர் நிலத்தினை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் நடாத்தியவேளையில் குறித்த பகுதி விடுவிக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டது. இருப்பினும் இப் பிரதேசத்தின் 9 ஏக்கர் நிலமும் முழுமையாக படையினரின் பயன்பாட்டிற்குத் தேவையாகவுள்ளது என பிரதேச செயலாளரிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.