கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை இழக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொகுதி அமைப்பாளர்களாக பதவி வகித்துக் கொண்டு கட்சியின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு இடையூறாக திகழும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அந்தப் பதவிகளிலிருந்து நீக்கப்பட உள்ளனர்.
விரைவில் கூட்டு எதிர்க்கட்சியின் இந்த உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர் பதவிகளை இழக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் நாடு முழுவதிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.
எனினும், கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர்களாக கடமையாற்றி வரும் பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
கட்சி மறுசீரமைப்புப் பணிகளுக்கு கூட்டு எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்குவதில்லை.
இவ்வாறான தொகுதிகளில் புதிதாக அமைப்பாளர்களை நியமித்து கட்சியின் மறுசீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தப்படும்.
இதற்காக தகுதியான தொகுதி அமைப்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

