மஹிந்த அரசாங்கத்தில்110 மில்லியன் நட்டம்..!

330 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்திலேயே 110 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 110 மில்லியன் ரூபா நட்டம், மஹிந்த ராஜபக்ஸவின் காலத்திலேயே ஏற்பட்டது. நாம், மக்கள் மீது சுமையை சுமத்தாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம்.

எனினும், அன்று நட்டத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களே இன்று சத்தமிடுகின்றனர். அதனையே இன்று பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் காண முடிகின்றது.

எவ்வாறாயினும், இவை நேற்று அல்லது நேற்று முன்தினம் இடம்பெற்ற விடயங்கள் அல்ல. மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற விடயங்களே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.