மக்கள் கிளர்ச்சி ஏற்படும்! வாசுதேவ அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!!

338 0

மக்கள் கிளர்ச்சி ஏற்படக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொரளை என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும்.உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் தொடர்ந்தும் காலம் தாழ்த்தினால் மக்கள் கிளர்ச்சியொன்றை அரசாங்கம் எதிர்நோக்க நேரிடும்.

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் கூட்டு எதிர்க்கட்சி செயற்படும்.கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமன்றி உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு ஆதரவாக செயற்படும் ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு போராட்டம் நடத்தப்படும்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எப்போது நடத்த முடியும் என அறிவித்து நியாயமான ஓர் கால எல்லைக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் சர்வஜன வாக்குரிமைக்காக பாரிய மக்கள் எழுச்சிப் போராட்டம் வெடிக்கும்.

மக்கள் எதிர்ப்புக்களை கட்டுப்படுத்த அரசாங்கம் புதிய சட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது எனவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.